வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் இன்னும் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால், பஸ்நிலைய வளாகம் தரைக்கடை மார்க்கெட் போல் மாறி வருகிறது. தள்ளுவண்டி, சைக்கிள்கள் மூலம் சிறு வியாபாரிகள் இதனை ஆக்கிரமித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் அனைத்து கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.
-ரமேஷ், முத்துமண்டபம், வேலூர்.