வாலாஜாவில் உள்ள மயானத்தில் அரிச்சந்திரன் சிலை உள்ளது. அனைத்து ஊர்களிலும் மயானத்தில் முதல் மரியாதை அரிச்சந்திரனுக்கு அளிக்கப்படும். ஆனால் வாலாஜாவில் உள்ள சிலையின் கால்களை சமூக விரோதிகள் உடைத்து விட்டனர். இதனால் அந்தச் சிலையை யாரும் தற்போது வழிபடுவதில்லை. எனவே புதிய சிலையை பொதுமக்கள் வழிபாட்டுக்கு வைத்து ஏற்பாடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நரசிம்மன், வாலாஜா.