போளூர் தாலுகா களம்பூர் முஸ்லிம் தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. அந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமாகி விட்டது. ஆனால் இன்னும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. அரசு ஏற்பாடு செய்துள்ள தற்காலிக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி செயல் படுகிறது. அங்கு போதிய வசதிகள் இல்லை. அங்கு குழந்தைகளும் சரியாக வருவதில்லை. அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஷா, களம்பூர்.