பூட்டிக்கிடக்கும் பாலூட்டும் அறை

Update: 2023-07-16 16:50 GMT

வேலூர் கோட்டையைச் சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறை எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்ச்செல்வன், வேலூர்.

மேலும் செய்திகள்