தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வரகூர் கிராமம். அங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி பல லட்சம் ரூபாய் செலவில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை, அதிகாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக வைத்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-குருமூர்த்தி, வரகூர்.