வேலூர் சத்துவாச்சாரி ஜமாதி மலையடிவாரத்தில் சுகாதார வளாகம் புனரமைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது. மேலும் இந்தப் பகுதியில் பொது இடங்களில் திறந்த வெளி கழிப்பிடமாக பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவானந்தம், வேலூர்.