தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது பேராயம்பட்டு. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுப விசேஷங்களை நடத்துவதற்காக அப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கட்டி பல ஆண்டுகள் ஆகியும் அதை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-சிவா, பேராயம்பட்டு.