இருள் சூழ்ந்த ரெயில்வே சுரங்கப்பாதை

Update: 2025-08-10 17:23 GMT

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சோலார் விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளன. இதனால் அந்த சுரங்க பாதை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சோலார் மின் விளக்கை பழுது நீக்கி அதனை எரிய வைக்க வேண்டும்.

-காமராஜ், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்