வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் 4-வது வார்டில் செங்குட்டை மக்கள் இறந்து விட்டால் அடக்கம் செய்யவும், எரியூட்டவும் மயானம் இருந்து வருகிறது. மயானப் பகுதியில் வேலூர் மாநகராட்சி திடக்கழிவு கிடங்கை அமைத்து, அதைச் சுற்றி உள்ள பகுதியைப் பயன்படுத்தி வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்ய போதுமான இடம் இல்லாததால் மயானப் பகுதி குறுகி விட்டது. எனவே மயானத்துக்கு கூடுதல் இடத்தை மாநகராட்சியும், வருவாய்த்துறையினரும் ஒதுக்க வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.