வேலூர் பென்லேன்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு மற்றும் பிரசவ பிரிவு கட்டிடம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பதற்காக இரு புறங்களில் சிமெண்டு சிலாப்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் உட்கார இடமின்றி நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் சிமெண்டு சிலாப்களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருநாவுக்கரசு, தென்னமரத்தெரு, வேலூா்.