சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் குளம் உள்ளது. இந்தக் குளம் தற்போது பெய்து வரும் மழையால் நீர்நிரம்பி காணப்படுகிறது. குளம் அருகில் பள்ளிகள் உள்ளன. அதில் படிக்கும் மாணவ-மாணவிகள் அந்தக் குளம் வழியாகத் தான் பள்ளிக்குச் செல்கிறார்கள். மதிய உணவு இடைவேளை நேரத்தில் அந்தக் குளத்தின் அருகிலேயே விளையாடுகிறார்கள். இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குளத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.