குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்

Update: 2023-10-04 16:30 GMT

ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பாறைகுளம் 100 அடி ஆழம் கொண்டதாகும். இந்தக் குளத்தில் அடிக்கடி மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களும், நடந்து செல்பவர்களும் தவறி விழுந்து பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு குளத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க மாவட்ட நிர்வாகமோ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ, ஊராட்சி மன்றமோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாறன், ஆரணி. 

மேலும் செய்திகள்