தஞ்சை பெரியகோவில் அருகே ராஜராஜன் சோழன் சிலை பூங்கா சுற்றுச்சுவர் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் கால்நடைகள் உள்ளே சென்று விடுகின்றன. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை.