திமிரி-ஆரணி நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோடு அருகே சாலையோரம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையை அருகில் உள்ள மரக்கிளை மறைத்திருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால், சாலையோரம் பெயர் பலகையை மறைத்திருந்த மரக்கிளையை நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.
-ஏகாம்பரம், வளையாத்தூர்.