திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து தரை ஆங்காங்கே பள்ளமாக உள்ளன. பஸ்சில் ஏறும், இறங்கும் முதியவர்கள், பெண் பயணிகள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர். புதிய பஸ் நிலையத்தில் உள்ள பள்ளங்களை சிமெண்டு கலவை போட்டு சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கதிரவன், திருப்பத்தூர்.