திருச்சி கிராப்பட்டி அன்புநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.