கந்திலி அருகே சுந்தரம்பள்ளி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் பஸ் ஏறி செல்வதற்காகப் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தின் கீழே காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முன் வருவார்களா?
-மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர்.