வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் இரவு நேரங்களில் நாய்கள் கூட்டமாக கூடி, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்லும் மக்களையும் துரத்தி அச்சுறுத்துகின்றன. இதேபோல், காகிதப்பட்டறை பகுதியிலும் நாய்களால் அச்சுறுத்தல் உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜேம்ஸ்குமார், வேலூர்.