ஆரணி நகரில் 3-வது வார்டு பள்ளிக்கூட தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் கழிவறை வசதியே இல்லை. மக்களின் நலன் கருதி சந்திரகுளம் அருகில் பொதுக்கழிவறை கட்டப்பட்டது. அந்தக் கழிவறைகள் மக்கள் பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதனால் கழிப்பறையை மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் பொதுக் கழிவறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
-பாஸ்கர், ஆரணி.