மதுரை நகர் காளவாசலில் இருந்து வைகைபாலம் வரை சாலையின் இருப்புறங்களிலும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தி வைக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகினற்னர். மேலும் இதனால் வாகனங்களுக்கிடேயே போக்குவரத்து இடையூறும் அதிகளவில் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.