காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு பெரிய ஏரியால் ஏராளமான நிலங்கள் பயிர் பாசனம் பெறுகிறது. பயிர் பாசனத்துக்காக 8 கால்வாய்கள் உள்ளன. அந்தக் கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போய் உள்ளன. புதர் வளர்ந்து காடுபோல் உள்ளன. அந்தக் கால்வாய்களை சீரமைத்தால் விவசாயிகள் பயன் பெறுவார்கள். வரும் கோடைக்காலத்தில் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனிவேலன், புதுப்பட்டு.