கூடலூர் நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளது. பி.எஸ்.என்.எல். அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்பட முக்கிய இடங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அதுவும், உடல் நலம் குன்றிய தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே உடல் நலன் பாதித்த தெருநாய்களை பிடித்து காப்பகத்து கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.