அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள பழமையான பிரசித்தி பெற்ற உப்பு குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவுடன் குளத்தை தூர் வாரி புதுப்பித்தனர். தற்போது குளத்தில் உள்ள பூங்கா இருக்கும் இடமே தெரியாத வகையில் பாழடைந்தும் செடி, கொடிகள் வளர்ந்தும், குப்பைகள் தேங்கியும் மாசடைந்தும் உள்ளது. இதனால், அப்பகுதியில் நோய் பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, அந்தக் குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லோகநாதன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.