பெங்களூரு காட்டன்பேட்டை பின்னிமில் ரோட்டில் சாலையோரம் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதை தற்போது உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சாலையும் குறுகலாக உள்ளதால் நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு அந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.