Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2023 2:54 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26939

நடைபாதையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள்

மற்றவை

பெங்களூரு வெளிப்புற சுற்றுவட்டச்சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் அங்குள்ள சர்ஜாப்புரா சாலையில் அமைந்திருக்கும் நடைபாதையில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டேண்டு போலவே பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:53 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26937

சிதிலமடைந்த நடைபாதை சரி செய்யப்படுமா?

மற்றவை

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள நடைபாதைகள் உடைந்து சிதிலமடைந்து கிடக்கின்றன. சாந்தி நகர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் அந்த நடைபாதைகளை பயன்படுத்தி தான் சாலையைக் கடந்து பஸ் நிலையத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது. ஆனால் நடைபாதைகள் சிதிலமடைந்து கிடப்பதால், அதை பயன்படுத்தி பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைகிறார்கள். வயதானவர்களின் பாதங்களை அந்த நடைபாதைகள் பதம் பார்த்து விடுகின்றன. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடைபாதைகளை சீரமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:51 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26934

குண்டும், குழியுமான சாலை

சாலை

பெங்களூரு ரிச்ம்ண்ட் சர்க்கிள் அருகே, அங்குள்ள போக்குவரத்து சிக்னலில் இருந்து டபுள் ரோட்டுக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கிறார்கள். இதன்காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர நேரத்தில் அந்த சாலையை கடந்து செல்ல மட்டும் குறைந்தது 15 நிமிடத்திற்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:49 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26928

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக் ராம் மந்திர் மைதானம் அருகே அரசு தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் முன்புறம் செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை போலீசாரோ, மாநகராட்சி அதிகாரிகளோ யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் குழியின் மேலே ஒரு டயரை போட்டு வைத்துள்ளனர். அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:45 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26922

திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி

மற்றவை

பெங்களூரு லால்பாக் பிரதான நுழைவு வாயில் எதிரே உள்ள லால்பாக் போர்ட் சாலையில் முஸ்லிம் சமூகத்தினருக்கான மயானம் உள்ளது. அதன் முன்புறம் நடைபாதையில் ஒரு டிரான்ஸ்பார்மரும், அதன் அருகேயே மின் இணைப்பு பெட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் மின் இணைப்பு பெட்டி மூடாமல் அப்படியே திறந்து வைத்துள்ளனர். மேலும் அதிலிருந்து மின் வயர்களும் தொங்குகின்றன. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த மின் இணைப்பு பெட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 2:30 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26694

ஜல்லி, மணல் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் மணல், ஜல்லி கற்கள் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த கற்கள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. மேலும், மணல் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கட்டிட பொருட்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 2:28 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26693

சேதமடைந்த நடைபாதை சிலாப்புகள்

மற்றவை

பெங்களூரு யஸ்வந்தபுரம் 6-வது கிராஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிலாப்புகள் தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் நடைபாதையை அதிகம் பயன்படுத்துவதால், அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதை தடுக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு சிதிலமடைந்த சிலாப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 2:27 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26692

பூங்காவில் குவியும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு நந்திதுர்கா சாலையில் மாரப்பா பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மேலும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பூங்காவில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 2:26 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26691

வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் நகரின் பெரிய மார்க்கெட் உள்ளது. அங்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனவே அந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 2:23 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#26690

நடைபாதை பள்ளத்தால் பாதசாரிகள் அவதி

மற்றவை

பெங்களூரு மில்லர்ஸ் சாலையில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை சிறுவர்கள் உள்பட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் ஒரு பகுதியில் சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தால், பாதசாரிகள் அவதி அடைகின்றனர். மேலும், அவர்கள் கால் தவறி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே அதை தடுக்க நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 3:06 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#25612

ராஜகால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

ராஜகால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

பெங்களூரு மாரத்தஹள்ளி-சர்ஜாப்புரா வெளிவட்ட சாலையில் தேவரபீசனஹள்ளி பகுதியில் ஒரு ஐ.டி. நிறுவனம் உள்ளது. அந்த ஐ.டி. நிறுவனத்தையொட்டி ராஜகால்வாய் ஓடுகிறது. அந்த ராஜகால்வாயில் தற்போது குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பயன்படுத்திய குப்பைகள் தான் ராஜகால்வாயில் கொட்டப்படுகிறது. ராஜகால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:02 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#8165

உடைந்து கிடக்கும் நடைபாதை

உடைந்து கிடக்கும் நடைபாதைமற்றவை

பெங்களூரு காட்டன்பேட்டை பின்னிமில் ரோட்டில் சாலையோரம் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதை தற்போது உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சாலையும் குறுகலாக உள்ளதால் நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு அந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick