படித்துறை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-13 15:42 GMT


நாகை மாவட்டம் திருக்குவளை அருகே நத்தப்பள்ளத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் படிக்கட்டுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இதனால் குளத்தில் குளிக்க வரும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். படிக்கட்டு முழுவதும் சேதமடைந்ததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த குளத்தின் படித்துறை படிக்கட்டுகைள சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் நத்தப்பள்ளம்

மேலும் செய்திகள்