மயான கொட்டகை, சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-04 13:57 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, புள்ளம்பாடி கக்கன்காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடல்களை எரியூட்டவும், நல்லடக்கம் செய்யவும் சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் மழைபெய்யும்போது இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கென மயான கொட்டகை அமைக்கப்படாமல் உள்ளதால் மழைநேரத்தில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்