திறக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2022-07-26 11:08 GMT
சேலம் மாநகராட்சி மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்களுக்கான பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் ஆண்டுகள் பல கடந்து அந்த பொதுக்கழிப்பிடம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-இ.குருபாலன், மஜ்ரா, கொல்லப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்