தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னையடி பகுதியில் வால்குளம் உள்ளது. என்.பி.சானலின் கிளை கால்வாய் மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த குளத்தை புன்னையடி பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தை முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் ஆகாய தாமரைகள் வளர்ந்து வயல்வெளி போல் காணப்படுகிறது. இதனால், குளம் நிரம்பி இருந்தும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்.ஜாண்சன், புன்னையடி.