கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஜோடுகொத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கட்டிடத்தைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. குழந்தைகள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி தூய்மையாக வைக்க வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுபாஷ், ஜோடுகொத்தூர், கிருஷ்ணகிரி.