தஞ்சை களிமேட்டிலிருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலையில் பெரியார்நகர் நரிமேடு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தானிய கிடங்கு அமைந்துள்ளது. இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் சுற்றுச்சுவர்கள் விழும் நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது.இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் இப்பகுதிப் பொதுமக்களும் அச்சத்துடனே இப்பகுதியைக் கடந்து செல்கின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானியக்கிடங்கை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்பழகன்,களிமேடு