வீணாகும் தானியங்கள்

Update: 2022-08-22 10:09 GMT

தமிழக மக்களுக்கு தமிழக அரசு ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கி வருகிறது. குறிப்பாக கோதுமை வட மாநிலங்களில் இருந்து கூட்ஸ் ரெயில் மூலம் திருப்பூர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் ரெயிவே கூட்ஷெட்டில் இருந்து லாரியில் ஏற்றப்படும் கோதுமை சிந்தி வீணாகிறது. மேலும் கிழிந்து கோணிப்பை என்பதால் அந்த லாரி செல்லும் பகுதியில் சாலை எங்கும் கோதுமை சிந்தி வீணாகிறது. பல ஆயிரம் கோடி செலவு செய்து, இப்படி வீணாக சாலையில் கோதுமை சிந்துவது கவலை அளிக்கிறது. எனவே நல்ல கோணிப்பையில் கோதுமையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்