நூலகங்கள் புதுப்பிக்கப்படுமா?

Update: 2022-08-21 15:49 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், இளைஞர்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு கிராமங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சில நூலகங்களின் கட்டிடங்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகுகிறது. இதனால் புத்தகங்கள் மழைநீரில் சேதமடைந்து பயன்படாமல் வீணாகிறது. அதன் காரணமாக நூலகத்தை பூட்டியே கிடக்கின்றன. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து நூலக கட்டிடங்களை புதுப்பிக்க முன் வர வேண்டும்.

-அன்பழகன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்