ஆக்கிரமிக்கப்பட்ட நஞ்சையன் ஏரி

Update: 2022-08-21 15:48 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நஞ்சையன் ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் நீர் நிரம்பி 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மழை பெய்தும், அந்த ஏரிக்கு மழைநீர் வருவதில்லை. மழைநீர் கால்வாய்களை சிலர் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள். மேலும் கால்வாய்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. கால்வாய் மற்றும் ஏரியை சுற்றி ஆக்கிரமிப்பை அகற்றினால் சுமார் 400 ஏக்கர் நிலம் பாசன வசதி கிடைக்கும். எனவே விவசாயிகளின் நலன்கருதி ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி பாசன வசதி செய்து தரவேண்டும்.

-ராஜேஸ்குமார், ஜெக்கேரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்