பராமரிக்க வேண்டிய அரசு கட்டிடம்

Update: 2022-08-21 15:46 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இண்டூர் ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் மண்டி பயனற்று கிடக்கிறது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே அங்குள்ள முட்புதர்களை அகற்றி அலுவலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பன்னீர்செல்வம், இண்டூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்