தெரு நாய்களால் மக்கள் அவதி

Update: 2025-11-09 17:45 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை துரத்தி கடிக்கின்றன. தினமும் அந்தப் பகுதியில் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதுசூதனன், வேலூர்.

மேலும் செய்திகள்