சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இவை பொதுமக்களை கடிப்பதால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அப்பகுதிகளில் கொசுமருந்து அடிப்பதுடன், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.