சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டுவரும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.