விஷஜந்துக்கள் நடமாட்டம்

Update: 2026-02-15 11:12 GMT

திருச்சி பொன்மலை கோட்டம் 65-வது வார்டுக்குட்பட்ட ஏர்போர்ட் காலனி பகுதியில் ஏராளமான செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்த புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஏர்போர்ட் காலனியை அடுத்துள்ள பெரியார் தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், விஷஜந்துக்கள் குடியிருப்புகளுக்குள் ஊடுருவுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஏர்போர்ட் காலனிக்குள் சமூகவிரோதிகளால் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி, சட்டவிரோத செயல்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்