திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்புநகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி குழந்தைகள், முதியவர்கள் இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து பொதுமக்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.