பாணாவரம் பஸ் நிறுத்தம் அருகே பொதுத்துறை நிறுவன வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம். மையம் சிலநாட்களாகவே பூட்டியே கிடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம். எந்திரத்தை தொடர்ந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-கணபதி, பாணாவரம்.