கிருஷ்ணகிரி மாவட்டம் தலைமை தபால் நிலையத்தின் வெளியே உள்ள தபால் பெட்டி துருப்பிடித்து சேதமடைந்து உள்ளது. இதனால் மக்கள் அனுப்பும் கடிதங்கள் எந்த வித சேதமும் இல்லாமல் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தபால் பெட்டியை அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.