முட்செடிகளை அகற்ற கோரிக்கை

Update: 2022-08-19 16:34 GMT

 தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அண்ணாமலைஅள்ளி ஊராட்சியில் காவேரிப்பட்டியில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் படர்ந்துள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. அப்போது எதிர் எதிரே ஒன்றுக்கொன்று செல்லும் போது போதுமான இடவசதி இல்லை. வாகனங்களில் செல்வோர் மீது சாலையோரத்தில் உள்ள முட்செடிகள் படுகின்றன. எனவே இந்த முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுகக் வேண்டும்.

-வெங்கடேசன், அண்ணாமலைஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்