திறக்கப்படாத பூங்கா

Update: 2022-08-18 16:11 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பொழுது போக்கிற்காகவும், உடற்பயிற்சி செய்யவும் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை திறக்கப்படாததால் பூங்காவில் உள்ள பொருட்கள் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சவுந்தர்யா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்