புகைபிடிப்பவர்களால் பாதிப்பு

Update: 2022-08-17 15:42 GMT
தேனி பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் பொது இடங்களில் புகைபிடிப்பது அதிக அளவில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையங்களுக்கு மாணவ, மாணவிகள் அதிகம் வந்து செல்லும் நிலையில் புகைப்பிடிப்பவர்களால் மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. புகைப்பிடிப்பவர்களை பார்த்து மாணவர்களும் புகையிலை பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பஸ் நிலைய பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு புகைபிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்