தர்மபுரி மாவட்டம் சுஞ்சல் நத்தம் ஊராட்சி ஏரியூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த பகுதியில் மாணவ-மாணவிகள், இளைஞர்களின் பயன்பாட்டிற்காக நூலகம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். இதுபற்றி புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-உமா, ஏரியூர், தர்மபுரி.