குரங்குகள் தொல்லை

Update: 2022-08-16 16:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் மல்லப்பாடி பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. விவசாய நிலங்களில் தேங்காய்களை பறித்து சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் விவசாய பயிர்களின் குருத்துகளை பறித்து சேதப்படுத்துகின்றன. வீடுகளில் புகுந்து பொருட்களை கீழே போட்டு வீணாக்குகின்றன. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.

-பெருமாள், மல்லப்பாடி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்