மதுபிரியர்கள் தொல்லை

Update: 2022-08-16 16:42 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி ரெயில் நிலையம் செல்லும் சாலை மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் மது அருந்திவிட்டு சாலையில் பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். குறிப்பாக மதுபிரியர்கள் பொதுமக்கள், பெண்களுக்கு தொல்லையாக இருக்கிறார்கள். இதனால் ரெயில் நிலையம் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனை உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

-வைத்தியலிங்கம், மாரண்ட‌அள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்