தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி நெடுஞ்சாலையில் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் புளியமரம் உள்ளது. இதன் அடிபாகம் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. இது எந்த நேரமும் சாலையில் விழும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் காற்று வேகமாக அடிக்கும் போது சாலையில் செல்லும் வாகனங்கள் மீது அல்லது சாலையில் விழுந்தோ விபத்து ஏற்படக்கூடும் எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த மரத்தை அகற்ற வேண்டும்.
-ரவி, தர்மபுரி.