நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-08-15 10:30 GMT

நகரில் நடுவே ஆறுகள் ஓடுவது அந்த நகருக்கும், மக்களுக்கும் கிடைத்த வரப்பிரசாரம். ஆனால் ஆறுகள் படும்பாடு பரிதாபமாக உள்ளது. திருப்பூர் நகரின் நடுவே ஓடும் நொய்யல் ஆறு பெருமை மிக்கது. வளம் குன்றா கோவை மாவட்ட வெள்ளியங்கிரி மலையில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஆறால், மண்வளம் செழித்தோங்கி நிற்கிறது. ஆனால் அந்தஆறு சமீப காலமாக சுமக்கக்கூடாதவற்றை எல்லாம் சுமந்து வருகிறது. அதிலும் நாற்றம் பிடித்த சாக்கடை அதில் கலந்து விடுவதால் கருப்பு நிற ஆறாக மாறி விட்டது. இதற்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார் சிட்டி என்பது நகரை அழகுபடுத்துவ மட்டுமல்ல, நகரின் நடுவில் ஓடும் ஆற்றையும் பாதுகாப்பதுதான்


மேலும் செய்திகள்